மார்ச் 8 ஆம் தேதி நெல்லையில் உழைக்கும் மகளீர் மாநாடு நடத்தப்படுகிறது. இதுதொடர்பான தெண்மண்டல ஆலோசனைக் கூட்டம் மகளீர் அணி செயலாளர் நற்சோனை தலைமையில் நடைபெற்றது.
இதில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் கா. கலைக்கோட்டுதயம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். இதில் ஆர்வலன், ஆற்றலரசு, கலைவேந்தன், கனியமுதன், மோகன், செல்லையா பாண்டி, ஜீவா உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கே. டி.சி நகர் பகுதியை சேர்ந்த தேமுதிக பிரமுகர் செல்லத்துரை தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கா.கலைக்கோட்டுதயம் முன்னிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர்.