Tamilan Television - the soul of the world tamils
Advertisement
Untitled Document
advt
advt
advt
advt


இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்கான ‌நிவாரண‌ப் ப‌ணிக‌ளி‌ன் ‌நிலைமைகளை அ‌றிய அ‌திகா‌ரிக‌ள் குழு ஒ‌ன்றை ‌நிய‌மி‌க்க நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌‌ம் எ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் உறு‌தி அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.
  2010-07-20 00:33:07
இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்கான ‌நிவாரண‌ப் ப‌ணிக‌ளி‌ன் ‌நிலைமைகளை அ‌றிய முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வ‌லியுறு‌த்‌தியபடி அ‌திகா‌ரிக‌ள் குழு ஒ‌ன்றை ‌நிய‌மி‌க்க நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌‌ம் எ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் உறு‌தி அ‌ளி‌த்து‌ள்ளா‌ர். கா‌ங்‌கிர‌‌ஸ் தலைவ‌ர் சோ‌னியா கா‌ந்‌தி தலைமை‌யி‌ல் ஐ‌க்‌கிய மு‌ற்போ‌க்கு கூ‌ட்ட‌ணி க‌ட்‌சிக‌ளி‌ன் கூ‌ட்ட‌ம் டெ‌ல்ல‌ி‌யி‌ல் நே‌ற்று நடைபெ‌ற்றது. அ‌தி‌ல் மழைகால கூ‌ட்ட‌த்தொடரை சுமூகமாக நட‌த்துவது உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு ‌விஷய‌ங்க‌‌ள் கு‌றி‌த்து ‌விவா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டது. கூ‌ட்ட‌த்‌தி‌ல் ‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் ப‌ங்கே‌ற்ற நாடாளும‌ன்ற ‌தி.மு.க. குழு‌த் தலைவ‌ர் டி.ஆ‌ர்.பாலு, இல‌ங்கை‌யி‌ல் ‌மீ‌ள் குடியம‌த்து‌ம் ப‌ணிக‌ள் காலதாமத‌மி‌ன்‌றி ‌நிறைவே‌ற்ற ம‌த்‌திய அரசு வ‌லியுறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ர்.‌ மீ‌ள் குடியே‌ற்ற‌ம் தொட‌ர்பாக இ‌ந்‌தியா‌ வழ‌ங்‌கிய 500 கோடி ரூபா‌ய் முறையாக செல‌விட‌ப்ப‌டு‌கிறதா எ‌ன்பது தெ‌ரிய‌வி‌ல்லை எ‌ன்று அ‌வ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர். இது தொட‌ர்பாக ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌‌‌ங்‌கி‌ற்கு முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி எழு‌திய கடித‌த்த‌ி‌ல், இல‌ங்கை‌யி‌ல் மறுவா‌‌ழ்வு ப‌ணிக‌ள் ம‌ற்று‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட இட‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள உ‌ண்மை ‌நிலையை க‌ண்ட‌றிய ‌சிற‌ப்பு தூதரை ‌நிய‌மி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளதை டி.ஆ‌ர்.பாலு சு‌ட்டி‌க்கா‌‌ட்டினா‌ர். இத‌ற்கு ப‌‌தி‌ல் அ‌ளி‌த்த ‌பிரதம‌‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங், கருணா‌நி‌தி‌‌யி‌ன் கோ‌ரி‌க்கை ‌நி‌ச்சய‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்படு‌ம் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர். இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்க‌ளி‌ன் மறுவா‌ழ்‌வு‌க்காக இ‌ந்‌திய அரசு வழ‌ங்‌கிய ‌நி‌தி முறையாக செல‌விட‌ப்படு‌கி‌ன்றதா எ‌ன்பதை ‌அ‌றி‌ந்‌திட அ‌திகா‌ரிக‌ள் குழுவை ‌நிய‌மி‌த்து இல‌ங்கை‌க்கு அனு‌ப்‌பி வை‌த்‌திட நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று ‌பிரதம‌ர் உறு‌தி அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.


கருத்துரை:

கருத்துரை இடுங்கள்! :

பெயர் :

மின்னஞ்சல் :

கருத்து:

 

மேலதிக செய்திகள்



இந்தப்பக்கத்தை சேமிக்க/நண்பர்களுக்கு அனுப்ப..
பார்வையாளர் எண்ணிக்கை   இணையத்தில்:   10 பேர் இன்று : 1208 நேற்று: 3140 மொத்தம்: 9505994
காப்புரிமை © 2009, தமிழன் கலைக்கூடம்