இந்தியப் பொருளாதார மொத்த வளர்ச்சி, 8.5 சதவீதமாக வந்தால், நான் மகிழ்ச்சி அடைவேன் என்று, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
2010-07-20 00:41:22
இந்தியப் பொருளாதார மொத்த வளர்ச்சி, 8.5 சதவீதமாக வந்தால், நான் மகிழ்ச்சி அடைவேன் என்று, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஏப்ரலில், சர்வதேச நிதி ஆணையம் (ஐ.எம்.எப்.,), 2010ம் ஆண்டுக்கான இந்தியப் பொருளாதார வளர்ச்சியை 8.8 சதவீதமாக நிர்ணயித்திருந்தது. ஆனால், இந்த மாதத்தின் முதலில் அதை 9.5 சதவீதமாக அதிகரித்து விட்டது. இதுபற்றி, இந்தியத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான சி.ஐ.ஐ., ஏற்பாடு செய்திருந்த நிதி பற்றிய மாநாடு ஒன்றில் பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, "ஐ.எம்.எப்., உடன், நமக்கு எப்போதும் சர்ச்சை இருந்து கொண்டே தான் உள்ளது. இருந்தாலும் அது மறுநிர்ணயம் செய்துள்ள இந்த இலக்கை நான் ஏற்றுக் கொள்கிறேன். இப்போதும் என் முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன். பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக உயர்ந்தாலும் எனக்கு மகிழ்ச்சி தான்' என்று தெரிவித்தார்.