Tamilan Television - the soul of the world tamils
Advertisement
Untitled Document
advt
advt
advt
advt


சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட ராம ராஜூவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
  2010-07-20 06:22:36
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட ராம ராஜூவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. கடந்த 2009 ஜனவரியில் இந்நிறுவனத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர். ராமலிங்க ராஜூ மற்றும் அவரின் சகோதரர் ராம ராஜூ  ஆகியோர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 120பி ( குற்றச்சதி), 420 (மோசடி), 406, 467, மற்றும் 427 (நம்பிக்கை துரோகம், முறைகேடு மற்றும் ஆவணங்களில் மோசடி செய்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் 20.7.2010  இன்று ராமலிங்க ராஜூவின் சகோதரரும் சத்யம் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான ராம ராஜூவுக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.


கருத்துரை:

கருத்துரை இடுங்கள்! :

பெயர் :

மின்னஞ்சல் :

கருத்து:

 

மேலதிக செய்திகள்



இந்தப்பக்கத்தை சேமிக்க/நண்பர்களுக்கு அனுப்ப..
பார்வையாளர் எண்ணிக்கை   இணையத்தில்:   7 பேர் இன்று : 1243 நேற்று: 3140 மொத்தம்: 9506029
காப்புரிமை © 2009, தமிழன் கலைக்கூடம்