தமிழ் மக்களை மறு குடியேற்றம் செய்யும் பணிகள் நடப்பதாக அரசு கூறுகிறது. ஆனால் எதுவும் திருப்திகரமாக இல்லை என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
2010-07-21 00:56:04
தமிழ் மக்களை மறு குடியேற்றம் செய்யும் பணிகள் நடப்பதாக அரசு கூறுகிறது. ஆனால் எதுவும் திருப்திகரமாக இல்லை என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார். சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா, இலங்கை மீனவர்கள் பிரச்னை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்தப் பிரச்னைக்கு இந்திய அரசும், இலங்கை அரசும் மற்றும் இருநாட்டின் மீனவர் சங்க பிரதிநிதிகளும் சேர்ந்து பேச்சு நடத்தவேண்டும். இந்தப் பேச்சு மனம் விட்டு, சுதந்திரமான வகையில் நடந்தால்தான் சுமூகத் தீர்வு காண முடியும். இலங்கை அரசு தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறது. ஆனால் பணிகள் எதுவும் நடக்கவில்லை. நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த பிரச்னையை எழுப்ப இருக்கிறோம். ஐ.நா. குழு இலங்கை வந்தது சரியா என தெரியவில்லை. அதே நேரத்தில் அந்தக் குழுவை திருப்பி அனுப்பியது சரியல்ல. மொத்தத்தில் இலங்கையில் இன்று உள்ள நிலவரம் எதுவுமே திருப்திகரமாக இல்லை என்றுதான் கூற முடியும் என்றார்.