Tamilan Television - the soul of the world tamils
Advertisement
Untitled Document
advt
advt
advt
advt


உலகில் அதிக ஊழியர்கள் கொண்ட துறையாக இந்திய ரெயில்வே துறை உள்ளது. அதிகம் பேர் பணியாற்றும் துறை என்பதால் இங்கு ஊழலும் அதிக அளவில் நடந்து வருகிறது.
  2010-07-21 01:19:13
உலகில் அதிக ஊழியர்கள் கொண்ட துறையாக இந்திய ரெயில்வே துறை உள்ளது. இந்த துறையில் மட்டும் 14 லட்சம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.அதிகம் பேர் பணியாற்றும் துறை என்பதால் இங்கு ஊழலும் அதிக அளவில் நடந்து வருகிறது. சமீபத்தில் ரெயில்வே ஊழியர் தேர்வு வாரிய அதிகாரிகள் ஊழலில் சம்பந்தப்பட்டு இருந்ததை சி.பி.ஐ. போலீசார் கண்டு பிடித்தனர். தேர்வு வாரிய தலைவர் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டு இருந்தனர். இதேபோல மேலும் பல பிரிவுகளிலும் ஊழல் நடப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரெயில்வே துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து ஆராய முடிவு செய்தனர். இதற்காக அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது. ரெயில்வேயில் மொத்தம் 16 மண்டலங்கள் உள்ளன. இவற்றில் அனைத்து மண்டலங்களிலும் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் இந்த ஆய்வுகள் நடந்தன. மொத்தம் 25 ஆயிரத்து 283 ஆய்வுகள் நடத்தப்பட்டது. இத்துடன் திடீர் சோதனைகளும் நடத்தப்பட்டன. சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரெயில்வேயில் 2,667 சோதனைகளும், வடகிழக்கு ரெயில்வேயில் 3,226 சோதனைகளும் வடக்கு ரெயில்வேயில் 2,699 சோதனைகளும், வடக்கு எல்லை ரெயில்வேயில் 2,423 சோதனைகளும் நடத்தப்பட்டன. அப்போது 215 உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 7,000 அதிகாரிகள் ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. வடக்கு ரெயில்வேயில் 1,203 பேரும், தென் மத்திய ரெயில்வேயில் 736 பேரும், மேற்கு ரெயில்வேயில் 729 பேரும், மத்திய ரெயில்வேயில் 547 பேரும், தெற்கு ரெயில்வேயில் 537 பேரும், வடக்கு மத்திய ரெயில்வேயில் 414 பேரும் லஞ்ச ஊழலில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மீது முதல் கட்டமாக துறை வாரியான நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டன. இப்போது அவர்கள் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கின்றன. இதற்கான விசாரணை இன்று முதல் தொடங்குகிறது. இதன் விசாரணை முடிந்ததும் அவர்கள் மீது கைது உள்ளிட்ட சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ரெயில்வே துறையில் ஊழல், முறைகேடுகளை தடுக்க கடுமையான சட்ட திட்டங்களை கொண்டு வரவும் ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது.


கருத்துரை:

கருத்துரை இடுங்கள்! :

பெயர் :

மின்னஞ்சல் :

கருத்து:

 

மேலதிக செய்திகள்



இந்தப்பக்கத்தை சேமிக்க/நண்பர்களுக்கு அனுப்ப..
பார்வையாளர் எண்ணிக்கை   இணையத்தில்:   9 பேர் இன்று : 1308 நேற்று: 3140 மொத்தம்: 9506094
காப்புரிமை © 2009, தமிழன் கலைக்கூடம்