அரசுக்கு எதிராக அவதூறு செய்தி வெளியிட்டதாக கூறி தினபூமி நாளிதழின் ஆசிரியர், சிறப்பு செய்தியாளர் உட்பட மூன்றுபேர் மதுரையில் நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டனர்
2010-07-21 08:06:54
. மதுரையருகேயுள்ள கீழவளவு மற்றும் கீழையூர் பகுதியில் உள்ள சுரங்கத்தில் இருந்து ரூபாய் ஆயிரத்து ஐநூறுகோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் கடத்தப்பட்டுள்ளதாக பட ஆதாரங்களுடன் தினபூமி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை வெளியிட்ட செய்தி ஆசிரியர் மணிமாறன், சிறப்பு செய்தியாளர் ரமேஷ்குமார் உள்ளிட்ட மூன்றுபேரை அவர்களது வீடுகளில் புகுந்து வலுக்கட்டாயமாக கைதுசெய்தனர். இதனை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை முன்பு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் விஜயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச்செயலாளர் ஜகாங்கீர், செல்வவினாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த கைது நடவடிக்கைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம், மற்றும் பத்திரிகையாளர் சங்கம், பல்வேறு ஊடகங்கள், புதிய தமிழகம்கட்சி உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.