அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்தார்.
2010-07-22 08:19:22
நேற்று ஆந்திரா மற்றும் வங்கக்கடல் வளிமண்டலத்தில் மேலடுக்குகளில் நிலைகொண்டிருந்த சுழற்சியானது இன்று காலை சத்தீஸ்கரில் நிலைகொண்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சின்னக்கல்லார் பகுதியில் 6 செ.மீ மழையும், வால்பாறை, ஆத்தூர், தரங்கம்பாடி ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழையும், மங்கலபுரம், விருத்தாச்சலம், திருமயம், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் 2 செ.மீ மழையும், அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பசலனம் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் லேசான மழையும், கடலோர மாவட்டங்களான கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.