ஜூனியர் ரெட்கிராஸ்' அமைப்பின் செயல்பாடுகள் குறித்த பொதுக்குழுக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது.
2010-07-28 03:59:52
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு 'ஜூனியர் ரெட்கிராஸ்' அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் ராக்லான்ட் மதுரம் தலைமை தாங்கினார். இதில் 2009-2010-ஆம் ஆண்டிற்கான ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பியூலா ஜெயராமன், சையது அம்மாள் அறக்கட்டளை தலைவர் பாபுஅப்துல்லா, ஹமீதியா பள்ளித் தாளாளர் தஸ்தகீர், போக்குவரத்து காவல்ஆய்வாளர் செல்வின் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுற்று சூழலை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த மரக்கன்றுகள் நடப்பட்டன.