விலைவாசி உயர்வு குறித்து எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் இன்று நாள்முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
2010-07-28 04:03:35
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று, விலைவாசி உயர்வு. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்கட்சியினர் மாநிலங்களவையில் கிளப்பினர். உறுப்பினர்களை அமைதி காக்கும்படி அவைத்தலைவர் அமீத்அன்சாரி கேட்டுக் கொண்ட பின்னரும் உறுப்பினர்கள் கூச்சல்போட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனையடுத்து நண்பகல் பனிரெண்டுமணிவரை அவையை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் தெரிவித்தார். மீண்டும் அவை கூடியதும், உறுப்பினர்கள் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டதால் நாள்முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மக்களவையிலும் பாரதிய ஜனதா கட்சி, சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்கட்சிகள் விலைவாசி உயர்வு பிரச்சனை குறித்து கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால் நண்பகல் 12 மணிவரை அவை ஒத்திவைப்பதாக மீராகுமார் அறிவித்தார்.