மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான முக்கிய உபரகணங்கள் தயார் செய்யும் தொழிற்சாலை ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டம், ஸ்ரீகாளஸ்தி அருகே துவங்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர்மன்மோகன்சிங் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது போதுமான அளவிற்கு மின்சாரம் கிடைத்தால்தான் விவசாயமும், தொழில்துறையும் நன்கு வளர்ச்சியடையும் என்றும் நீடீத்து நிலைக்கக்கூடிய பொருளாதார வளர்ச்சியை நாடு அடைய வேண்டும் எனில் மின்சாரத்தின் தேவை நிரப்பப்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார். மேலும் இத்தொழிற்சாலையின் மூலமாக 6 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 25 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும், வேலைவாய்ப்பு கிடைத்து இப்பகுதிமக்களின் பொருளாதார நிலையும் மேம்படும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சத்துணவு ஊழியர்களை எல்லாம் தி.மு.க. ஆட்சி பழிவாங்குவதாகவும்.,கடந்தகால அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அவர்களுக்கு எல்லாம் பட்டாபிசேகம் நடத்தி பரவசம் அடையும் அளவிற்கு பாதிநாள் வேலைக்கு முழுச்சம்பளம் கொடுத்தவரை போல், இன்றைக்கு ஜெயலலிதா பசுப்புவதாக குற்றம் சாட்டினார். மேலும் எம்.ஜி.ஆருடைய சத்துணவு திட்டத்தை விரிவாக்கி அதை உண்மையான சத்துணவாக்கியது தி.மு.க.ஆட்சிதான் என்றும் சத்துணவு சாப்பிடும் சிறுவர் - சிறுமியருக்கு வாரம் 3 முட்டை அல்லது வாழைப்பழம் வழங்கி அத்திட்டத்தை பலப்படுத்தியது தி.மு.க.ஆட்சியில்தான் என்றும் சத்துணவு ஊழியர்களின் இன்றைய கோரிக்கைகளை ஜெயலலிதா வாங்கிப்பார்த்து எண்ணென்ன கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று அவரே சொல்லட்டமே என்று அந்த அறிக்கையில் முதல்வர் கருhணாநிதி தெரிவித்துள்ளார்.
கோவையில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் போராட்டம் நடத்தி வரும் சத்துணவு ஊழியர்களின் கோரிக்;கைகளை முதல்வர் கருணாநிதி உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், சத்துணவு ஊழியர்களின் போராட்டத்தின் பின்னணியில் கம்யூனிஸ்டுகள் இருப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் விலைவாசி உயர்வை கண்டித்து செப்டம்பர் 7 ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களுடன் இணைந்து நாடுதழுவிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரித்துள்ளார்.
சென்னை எழும்பூர் தனியார் விடுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கட்சித் தலைவர் கோ.க.மணி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கட்சியின் நிறுவனர் மருத்தவர் இராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பசுமைப்புரட்சி நடைபெற்று வந்த தமிழகத்தில்; தற்போது மது புரட்சி நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, மாநில துணைத் தலைவர் ஏ.பி.ஏ.கஸ்ஸாலி, சுன்னத்ஜமாத் ஐக்கிய பேரவை பொது செயலாளர் மேலைநாஸர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி முகமது அலிஜின்னா, மற்றும் மெகா டிஜிட்டல் நிறுவனர் பஷிர்அகமது உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.