தஞ்சாவூரில் உலக தமிழ் செம்மொழிகள் உயர்ஆய்வு மையத்தை கட்டுவதற்கான அடிக்கல்லினை முதல்வர் கருணாநிதி நாட்டி வைத்து பேசினார். அப்போது உலக தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்ற குறுகிய காலத்தில் மத்திய அரசு 2 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து செம்மொழிகள் உயர் ஆய்வு மையத்தை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தி;ல் எத்தைனையோ ஆற்றல்மிக்க அரசுகள் இருந்தும் நூறு ஆண்டுகளாக எத்தைனையோ பேர் போராடி கிடைக்காத செம்மொழி தகுதி தமது அறப்போராட்டங்களினால் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார். மேலும் திராவிடம் என்ற சொல்லை அனைவரும் எதிர்த்து வந்தனர். ஆனால் தற்போது திராவிடம் என்ற சொல் இன்றி எந்த ஒரு கட்சியும் செயல்பட முடியாத நிலை உருவாகி உள்ளது என்று தெரிவித்தார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தி.மு.க.ஆட்சியை பல்வேறு வழிகளில் நாகரீகம் அற்ற வார்த்தைகளால் வசைபாடுகிறார். ஆனால் தி.மு.க. வை ஒருபோதும் மக்களிடமிருந்து பிரிக்கமுடியாது. மோசடி வழக்குகளில் ஜெயலலிதா தன்னை பாதுகாத்துக் கொள்ள இழுத்தடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். கார் வாங்கி வரிகட்டாத நடராஜனுக்கு இரண்டு ஆண்டு சிறைதண்டனை என்றால் 65 கோடி ஊழல் மோசடி செய்த ஜெயலலிதா அம்மையாருக்கு எத்தனை ஆண்டு சிறைதண்டனையோ என்று மக்கள் சிரிக்கிறார்கள் என்று முதல்வர் கருணாநிதி வேடிக்கையாக கூறினார்.
நாடாளுமன்றம் மழைக்காலக் கூட்டத் தொடரில் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு பிரச்சினையை கையில் எடுத்து பா.ஜ.க, இராஸ்டிரிய ஜனதாதளம். சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதற்கு பதிலளித்த அமைச்சர் முரளிதியோரா. ப்ரித்பாரி கமிட்டி சார்பில் மண்ணெண்ணைய் விலையி;ல் 6 ரூபாயும் சமையல் எரிவாயுவின் விலையில் சிலிண்டருக்கு நூறு ரூபாயும் அதிகரிக்க பரிந்துரைத்தது. ஆனால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டுதான் பெட்ரோல் - டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணையின் விலையை குறைந்த அளவில் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வந்த நிலையில் மண்ணெண்ணைய் விலையை 2002 – ஆம் ஆண்டிலிருந்து உயர்த்தாத மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது 3 ரூபாய் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நியாயமானது என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார். மேலும் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் - டீசல் மீதான விற்பனைவரி 33 சதவீதம் வரை விதிக்கப்படுகிறது என்பதை எதிர்கட்சிகள் உணர்ந்து கொள்ள ணே;டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார தேவை, சுயவேலைவாய்ப்பு உள்ளிட்ட வாழ்வாதாரம் தேவைகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் உதவிகளை வழங்கி வருகிறது. இதுகுறித்து அரசு செய்திகுறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாவது. இந்த ஆண்டு முதல் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் தொகையை 7 கோடியாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் இதனை செயல்படுத்த இதுவரை அரசு மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கி வந்த 4 கோடி உத்திரவாத தொகையை 8 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்த்ரிபவனில் உள்ளது மத்திய அரசின் திரைப்பட தணிக்கைத்துறை அலுவலகம். இதில் மண்டல அதிகாரியாக இராஜசேகர் என்பவர் பணிபுரிந்து வந்தார். படபிடிப்பு முடிவடைந்து வெளிவெர உள்ள ' காதல் சொல்லவந்தேன்' என்ற தமிழ் திரைப்படத்திற்கு சமீபத்தில் தணிக்கை நடந்தது. படத்தில் தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி மகன் பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதற்காக அதிகாரி இராஜசேகர் ரூபாய் ஒரு லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து படத் தயாரிப்பு நிர்வாகி சி.பி.ஐ. போலீசாரிடம் புகார் செய்தார். சி.பி.ஐ.அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து இரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிழலையில் முதல் தவனையாக தயாரிப்பு நிர்வாகி கோவிந்தராஜ் ரூபாய் 10 ஆயிரம் தணிக்கைத்துறை அதிகாரிக்கு லஞ்சமாக கொடுக்கும்போது சி.பி.ஐ.அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.