 |
|
கரூரில் உள்ள அருள்மிகு கல்யாண பசுமதீஸ்வரர் ஸ்வாமி திருக்கோவிலில் 63 நாயன்மார்களின் 16-வது ஆண்டுவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பஞ்சமூர்;த்திகள், 63 நாயன்மார்கள், மூலவர் மற்றும் உற்சவ மூர்;த்திகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனைதொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
பின்னர் வண்ணவிளக்கு அலங்காரத்துடன் 63 நாயன்மார்கள் திருவீதி உலா, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இதனை ஏராளமான பகத்கர் கண்டு அருளாசிபெற்றனர்.
|
 |
|
அனைவருக்கும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரியும், பெட்ரோல் - டீசல் விலைஉயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றை திரும்பப்பெறக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடுதழுவிய அளவில் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது.
இதன் ஒருபகுதியாக சென்னை கோயம்பேடு வணிகவளாம் அருகே விருகைப்பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. பகுதிப் பொறுப்பாளர் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரப்பயணத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
|
 |
|
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள கம்பவுண்டர்கள் நாள்தோறும் குடித்தவிட்டு போதையில் பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் நோயாளிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மருத்துவமனைக்குச் சென்ற நோயாளி ஒருவரை கம்பவுண்டர் அடித்து தகாத வார்த்தைகளால் திட்டி அவரிடமிருந்த கையடக்க தொலைபேசியை பறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த நோயாளிகள் ஒன்றுதிரண்டு மருத்தவமனையின் நிர்வாக சீர்கேடு களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
|
 |
|
அரக்கோணம் பழனிப்பேட்டையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபால் இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பவானி கருணா கரன், நகர செயலாளர் துரைகுப்புசாமி, ஒன்றியச் செயலாளர் பால்ராஜ்சீனிவாசன், விஜயன், பழனி, செல்வம், நாகபூசணம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
|
 |
|
திருப்பூர் பெருந்தொழுவில் உள்ள 'பிரண்ட் லைன்' பள்ளியில் நடைபெற்றது. இதில் இப்பள்ளியில் பயிலும் மாணவ – மாணவியரின் தாத்தா – பாட்டிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அப்போது பலூன் உடைத்தல், உரியடைக்கும் போட்டி, சட்டி உடைத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தாத்தா – பாட்டிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பள்ளியின் தாளாளர் சிவசாமி, பரிசுகள் வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார்.
|
 |
|
திருப்பூரில் உள்ள கூலிப்பாளையம் பகுதியில் வசித்துவந்தவர் செல்வராஜ், இவரது மனைவி கவிதா. இந்நிலையில் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு செல்வராஜ் மர்மமான முறையில் அங்குள்ள தோட்டம் ஒன்றில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து பெருமாநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது செல்வராஜின் மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு இருந்துவந்தது. ஒருகட்டத்தில் ஆத்திரமுற்ற கவிதா, கூலிப்படையை ஏவி கணவனை படுகொலை செய்ததாக தெரியவந்தது.
இந்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகாலமாக திருப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது, இந்நிலையில் நேற்று நடைபெற்ற இதன் இறுதிகட்ட் தீர்ப்பில் மனைவி கவிதா மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த சிவசங்கரன், பாலமுருகன், ராஜா, முத்துக்;குமார் ஆகிய 5 பேருக்கும் நீதிபதி இளங்கோ ஆயுள்தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
|
 |
|
கிவ் லைப் அறக்கட்டளையைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக தமிழ் மையம் சார்பில் மூன்றாவது மார்க், மாரத்தான் போட்டி இன்றுகாலை சென்னையில் நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மினமாரத்தான் 21 கிலோமீட்டர், அனைத்து பிரிவினர் பங்கேற்கும் 7 கிலோமீட்டர் ஓட்டம், வீல்சேர் ஓட்டம் என நான்குபிரிவுகளில் போட்டிகள் நடத்தப் பட்டன.
இந்த மாரத்தான் ஓட்டப்பந்தையத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கிவைத்தார். இதில் அமைச்சர்கள் மைதீன்கான், பூங்கோதை மேயர் மா.சுப்பிரமணியன், நடிகை சினேகா, மார்க்ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அண்ணா சதுக்கத்தில் இருந்து தொடங்கிய இந்த ஓட்டம், சாந்தோம், பெசன்ட்நகர் வேளாங்கண்ணி சர்;ச் வழியாக சென்று மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வந்தது. இதில் ஒருலட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
|
 |
|
இதுதொடர்பாக வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்த ஆட்சியில் பத்திரிகையாளர்களுக்கு சுதந்திரம் இல்லை என்றும், இதற்கு பத்திரிகையாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டதும், ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டதும் உதாரணம் என்றும் தெரிவித்தார்.
மக்களோடுதான் கூட்டணி என்று கூறும் விஜயகாந்த், கொடுக்கோல் ஆட்சியாக நடைபெற்றுவரும், இதனை அகற்ற மக்கள் விரும்பும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் 69 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத்தந்த ஜெயலலிதாவுக்கு வரும் ஏழாம்தேதி சென்னை தேனாம்பேட்டையில் பாராட்டுவிழா நடத்தப்போவதாகவும் ராமமூர்த்தி தெரிவித்தார்.
|
 |
|
கோவை மத்தியச்சிறைச்சாலை மைதானத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இந்தியா முழுவதும் ஏறத்தாழ 20 லட்சம் மாணவ – மாணவியருக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் தமிழகத்தில் மட்டும் 5 லட்சம் மாணவ – மாணவியருக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அதிகாரம் அளிக்கக்கூடிய கட்சியோடுதான் இருக்கப்போகிறோம் என்று காங்கிரஸ் கட்சியினருக்கு சிதம்பரம் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, சட்டமன்ற உறுப்பினர்கள் யசோதா, கோவைதங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
|
 |
|
கோவை சித்ரா அரங்கில் இந்திய தேசிய காங்கிரஸ்சின் 125 – வது ஆண்டு விழா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்ரமணியத்தின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு வருந்தினராக மத்திய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி கலந்து கொண்டு சுப்ரமணியத்தின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டு பேசினார். அப்போது இந்தியாவில் பசுமைப்புரட்சி ஏற்பட உறுதுணையாக இருந்தவர்களில் சி.சுப்ரமணியமும் ஒருவர் என்று பெருமிதம் தெரிவித்தார்.மேலும் தமிழகத்தில் 40 வருடமாக காங்கிரஸ் ஆட்சி இல்லாமல் போய்விட்டது. என்றும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் நிலை உருவாக வேண்டும் என்றும் அதற்கான முயற்சிகளை காங்கிரஸ் கட்சியினர் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
|
 |
|
வரைவு பட்டியலில் உள்ள தொகுதிகள் குறித்து அங்கிகரக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தியது. இதில் துணை தேர்தல் ஆணையர் வினோத்சுர்சி, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவின்குமார், உட்பட தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க. இந்திய கம்யுனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் தமிழகத்தில் சட்டமேலவை அமைப்பதில் அவசரம் காட்டக்கூடாது என தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தின.
|
 |
|
உறுப்பினர்கள் சம்பள உயர்வு தொடர்பாக மத்திய அமைச்சரவை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஊதிய உயர்வுக்கு அமைச்சர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் இது தொடர்பான விவகாரம் ஒத்தி வைக்கப்பட்டது. இத்தகவல் அறிந்த இராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத்யாதவ் ஊதிய உயர்விற்கு எதிர்ப்பு தெரிவி;ப்பவர்கள் சுவிஸ் வங்கிகளில் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளார்கள் என்றும் தம்மை போன்ற சாதாரண நாடுளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு அவசியம் என்றும் ஆவேசப்பட்டார். மேலும் அடிப்படை வசதிகளை செய்து தராத பகுதிகளில் வாழும் மக்களை மூளை சலவை செய்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக வன்முறையில் நக்சலைட்டுகள் ஈடுபடுத்துவதாக குற்றம் சாட்டினார்.
|
 |
|
சென்னை ஈக்காட்டுத் தாங்களில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகத்திற்கு நேற்று மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அறிவொளிமதி என்ற பெயரில் காலாந்திரி என்ற இடத்தில் இருந்து வந்துள்ள கடிதத்தில் மதுரை கூட்டத்தை ஜெயலலிதா ரத்து செய்ய வேண்டும், இல்லை யெனில் கூட்டத்திற்கு வரும் அவர்; குண்டு வைத்து கெடூரமாக கொள்ளப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எதிர்கட்சி தலைவரான ஜெயலலிதாவிற்கு மிரட்டல் விடுத்து கடந்த பல ஆண்டுகளில் இதுபோன்று நிறைய கடிதங்கள் ஜெயா டி.வி. அலுவலகத்திற்கு வந்துள்ளது. ஆதேபோல், தற்போது வந்துள்ள கடிதத்தையும் தங்களின் கவணத்திற்கு அனுப்பியுள்ளோம் எனவே ஜெயலலிதாவிற்கும், ஜெயா டி.வி ஊழியர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும், ஜெயா டி.வி. துணை தலைவர் இரங்கராஜன், டி.ஜி.பி. லத்திகாசரனுக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|