 |
|
சேலம் சி.எஸ்.ஐ.பள்ளி வளாகத்தில் தேசிய அளவிலான நாய் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சைபீரியான் அஸ்கி, ஸ்பேனியல், பக், ஜெர்மன் செப்பேட் உள்ளிட்ட நாற்பது வகையான நாய்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றன.
நாய்களின் வளர்ச்சி மற்றும் அதன் தோற்றங்களை பார்த்து நடுவர்கள் பரிசு வழங்கினர்.
இரண்டு நாளில் அதிகபடியான பரிசு பெறும் நாய்க்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படும் அக்மாகென்னல் கிளப் தலைவர் விசுகாளியப்பன் தெரிவித்தார்.
|
 |
|
இந்தவிழாவில் அருட்தந்தை வில்லியம் அடிகளார் கலந்துகொண்டு கொடியேற்றிவைத்து, திருப்பணியாற் றினார். பின்னர் கொடி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்துவ பெருமக்கள் கலந்துகொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தாளமுத்துநகர் பங்குத்தந்தை ஜான்சன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
|
 |
|
அரவாணிகளுக்கு நலவாரியம் அமைத்துக்கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், திருநங்கையர்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சகோதரிகள் அமைப்பு சார்பில், வானவில் விழா என்ற பெயரில் பேரணி கோவையில் நடைபெற்றது.
கோவை அரசு கலைக் கல்லூரி வழியாக சென்ற பேரணி, முக்கிய வீதிகளில் சென்று ரேஸ்கோர்ஸை சென்றடைந்தது. இதில் தாரை தப்பட்டை அடித்து அரவாணிகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.
இதுகுறித்து சகோதரிகள் அமைப்பின் நிர்வாகி கல்வி கூறுகையில்: கோவையில் திருநங்கைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தப் பேரணி நடைபெறுவதாகவும், தமிழகத்தில் சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல முன்னேற்றங்களை கண்டுவருவதாகவும் தெரிவித்தார்.
|
 |
|
திருவையாறு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டப் பொருளாளர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டச் செயலாளர் தமிழ்நேசன், மாநிலத் துணைப்பொதுச் செயலாளர் ஆலயமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரியும், திருவையாறு நான்காவது வார்டில் புதிய நியாயவிலைக் கடையொன்று அமைத்துத்தர வலியுறுத்தியும் கண்டன முழங்கங்கள் எழுப்பப்பட்டன. கிராமந்தோறும் டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசு, நியாயவிலைக் கடைகளை திறக்க தயக்கம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
|
 |
|
மேட்டுப்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்றுகாலை தொடங்கிய இருசக்கர வானகபிரச்சாரப் பேரணி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பெருமாள், நகரசெயலாளர் சிராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
ராமசாமிநகர் பகுதி ஒன்றாவது வார்டில் தொடங்கிய இப்பேரணி, எஸ்.எம்.நகர், மகாதேவபுரம், காட்டூர் நடூர் வழியாக சென்று அரசுப் போக்குவரத்து மணிமனை முன்பு நிறைவுற்றது.
|
 |
|
ரெட்டியார் சத்திரத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் வீட்டுவசதித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு, சிறப்புரையாற்றினார்.
இதில் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் சத்;தியமூர்;த்தி, அவைத்தலைவர் முருகேசன், இளைஞரணி நகர அமைப்பாளர் சின்னத்தாய்குமாரலிங்கம், துணைச் செயலாளர் கண்ணன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக அ.தி.மு.க., தே.மு.தி.க. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 500-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் தி.மு.க. வில் இணைந்தனர்.
|
 |
|
கரூரை அடுத்த மணிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியொன்றில் படித்துவந்த குழந்தைகளை பள்ளி வாகனத்தில் ஏற்றிச்செல்வது வழக்கம். வழக்கம்போல் இன்றுகாலை குழந்தைகளை ஏற்றிவந்த பேருந்து மணிமங்கலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வாகனத்தின் கதவு திறந்து சலீம் என்ற மாணவன் தவறி கீழே விழுந்தான்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவன்மீது பேருந்து சக்கரம் ஏறியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவத்தால் அப்பகுதியே சோகமான காணப்பட்டது. பாதுகாப்பு இல்லாமல் வாகனத்தில் குழந்தைகளை ஏற்றிவந்த பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று பெற்றோர் மற்றும் பொதுமக்கள் காவல்துறையினரை முற்றுகையிட்டனர்.
|
 |
|
திருச்சி – கரூர் - பெரம்பலூர் - அரியலூர் - தஞ்சாவூர் ஆகிய மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயற்குழுமாநாடு திருச்சியில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தலைமையேற்றுப் பேசிய தொல்.திருமாவளவன், அக்டோபர் பத்தாம்தேதி, சென்னையில் நடைபெறவிருக்கும் தமிழர் இறையாண்மை மாநாட்டில் தமிழகத்தில் எந்த கட்சியும் செய்யாத அளவிற்கு இளைஞர்களை ஒன்றுதிரட்டி அரசியலில் தவிர்க்கமுடியாத கட்சியாக விடுதலைச்சிறுத்தைகள் நிரூபிக்கும் வண்ணம் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க.வை அடுத்து அனைத்து தொகுதிகளிலும் வாக்கு வங்கிகளை பெற்றுள்ள கட்சி, விடுதலைச்சிறுத்தைகள்தான் என்றும், இதனை ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் செல்வாக்குள்ள அரசியல் தலைவர்கள் பட்டியலில் நான்காம் இடத்தை நமக்கு தந்திருக்கிறார்கள் என்றும், இப்படி ஊடகங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் மாற்று சக்தியாக விடுதலைச்சிறுத்தைகளை ஏற்றுக் கொள்ளாத நிலையிலும் தவிர்க்கமுடியாமல் சிலர் பதிவுசெய்கிறார்கள் என்றார்.
இந்த மாநாட்டில் அமைப்புச் செயலாளர் ஆற்றலரசு, மாவட்டச் செயலாளர் தமிழாதவன், மாநகர் மாவட்டச் செயலாளர் அரசு, மாவட்டப் பொறுப்பாளர்கள் செங்கோலன், பகலவன், எழுச்சி கலைமுரசு, தாமரைச்செல்வன். தங்கதுரை, குடந்தைஅரசன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக திருச்சி வந்த திருமாவளவனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
|
 |
|
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசிய மத்தியக்குழு உறுப்பினர் என்.வரதராஜன், சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தலித்துகளுக்கும் அருந்ததியர் களுக்கும் பாடுபட்டு வருகிறது என்றார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, நகர துணைச் செயலாளர் சின்னக்கருப்பன் உட்பட கட்சித் தோழர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
|
 |
|
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டு, முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களில் சிலர் மீள்குடியேற்றப்பட்டு அவர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள இந்தியா நிதியுதவி செய்துவருகிறது.
இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமாராவ், நான்குநாள் அரசுமுறைப் பயணமாக வரும் முப்பதாம் தேதி, இலங்கை செல்லவுள்ளார். அப்போது யாழ்பாணம், வவுனியா, திரிகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் மறுகுடியேற்றப்பணிகள், விரிவாக்கப்பணிகள் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தவுள்ளதாக தெரிகிறது.
வரும் செப்டம்பர் மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கை செல்லவுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும், அவர் ஆய்வு நடத்துவார் என தெரிகிறது.
இதனிடையே தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் நிர்பமாராவை சந்தித்து பிரச்சனைகளை எடுத்துரைப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
|
 |
|
சென்னை புனித ஜார்ஜ்கோட்டையில் நடைபெற்றுவரும் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் மாநாட்டின் இரண்டாவதுநாள் நிகழ்ச்சியான இன்று காவல்துறையினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
இதனை தொடங்கிவைத்து பேசிய முதல்வர் கருணாநிதி, தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளாக சட்டம் - ஒழுங்கு முற்றிலும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள் ளதாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சாதி மத மோதலை தூண்டிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
குற்றவாளிகளை கைதுசெய்யும்போது, காவல்துறையினர், அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளித்து நடந்துகொள்ளவேண்டும் என்று வலயுறுத்திய கருணாநிதி, மனித உரிமை மீறல்கள் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும் என்றார்.
மேலும் கணினி குற்றங்களை தடுக்க காவல்துறையினர் தனிக்கவனம் செலுத்தவேண்டும் என்றும், பொதுமக்கள் காவல்நிலையங்களுக்கு வரும்போது அவர்களை கண்ணியமாக நடத்துவதுடன் புகார்களின் பேரில் எவ்வித தயக்கமும் இன்றி நடவடிக்கை எடுத்து மக்களுக்கு, காவல்துறை மீது ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை ஏற்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
|
 |
|
இந்திய வெளியுறவு தூதரக அதிகாரிகளுக்கான கருத்தரங்கு நேற்று புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது காபூலில் உள்ள இந்திய தூதரகம் மீது நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளது என்றும், எனினும் அண்டை நாட்டுடன் நட்புறவை பேனுவதற்காக பாக்கிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தை தெடார வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார். கருத்தரங்கில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்,வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் தூதரக உயர்அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
|
 |
|
இதுகுறித்த சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் விவாதத்தில் பங்கேற்று பேசினர். இதற்கு பதிலளித்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார்பன்சால் உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் குறித்து ஆய்வு செய்ய தனி அமைப்பு ஒன்றை அமைப்பது அவசியம் என்றும் இதுகுறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இதன் பின் உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்த வகைசெய்யும் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதன்மூலம் உறுப்பினர்களின் தற்போதிய ஊதியமாக வழங்கப்படும். ரூபாய் 16 ஆயிரத்திலிருந்து மும்மடங்கு உயர்த்தி ரூபாய் 50 ஆயிரமாக உயர்ந்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
|
 |
|
முதல்வர் கருணாநிதியை கடந்த இரு தினங்களுக்கு முன்பு தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்கத் தலைவர் சங்க நிர்வாகிகளுடன் சேர்ந்து சந்தித்தார். அப்போது தென்னை விவசாயிகள் நலவாரியம் அமைத்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கேரிக்கைகளை நிறைவேற்றுமாறு மனு ஒன்றை முதல்வரிடம் அளித்தனர். அந்தகேரிக்கைகள் மீது விரைவில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் கருணாநிதி உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்களின் சங்கத்தின் கோரிக்கைகள் படி தென்னை விவசாயிகள் நலவாரியம் அமைத்து முதல்வர் கருணாநிதி நேற்று ஆணை பிறப்பித்தார்.
|
 |
|
மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் புனிதரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. மண்ணடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சீமாபஷீர் தலைமை தாங்கினார். சேக்முகமது முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு இரமலான் நோன்பினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது தமிழக ம்ககள் அரசியல் மாற்றத்தை விரும்புவதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க.சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அன்வர்இராஜா, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் ஐதர்அலி, தமிழ் மாநில முஸ்லீம்லீக் தலைவர் சேக்தாவுது, தலித் மக்கள் முன்னணி தலைவர் குமரிஅருண், ம.தி.மு.க. பொருளாளர் மாசிலாமணி, துணை பொதுச் செயலாளர் மல்லைசத்தியா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
|
 |
|
ஜெயலலிதா மீதான பிறந்தநாள் பரிசு வழக்கு நீதிபதி சி.பி.செல்வம் முன்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதாவின் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் கூடுதல் நீதிபதியாக செல்வம் இருந்ததாக கூறி அந்த வழக்கை வேறொரு நீதபதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி மதிவாணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து இந்த வழக்கை விசாரிக்க முடியாது என கூறி இந்த வழக்கிலிருந்து தமக்கு விடுப்பளிக்குமாறு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை கடிதத்தை அனுப்பினார். சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெறும் பிறந்தநாள் வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெயலலிதா சார்பில் கடந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் இரண்டாவது முறையாக மறுப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
|
|